ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்றுக்காக ஒவ்வொரு அணிகளும் தீவிரமான போட்டியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் அபாரமாக செயல்பட்டுவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைத் தவிர்த்து மற்ற 9 அணிகளிலும் எந்த மூன்று அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 50ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சம பலம் வாய்ந்த இரண்டு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • இடம் - ராஜிவ் காந்தி மைதானம், ஹைதராபாத்
  • நேரம் - இரவு 7.30 மணி
Advertisement

பிட்ச் ரிப்போர்ட்

நடப்பு ஐபிஎல் சீசனில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டது. அதன்படி அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்சரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 277 ரன்களைக் குவித்து சாதனை படைத்தது. இந்த மைதானம் பேட்டர்களுக்கு சொர்க்க புரியாக பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் இங்கு பந்துவீச்சாளர் பெரும் சவாலை சந்திக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இப்போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 18
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 09
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - 09

நேரலை

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

உத்தேச லெவன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ராம், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, அப்துல் சமத், பாட் கம்மின்ஸ் (கே), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனத்கட், நடராஜன்.

Advertisement

ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கே), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென்
  • பேட்டர்ஸ்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • ஆல்-ரவுண்டர்கள்: ஐடன் மார்க்ரம், ரியான் பராக்
  • பந்துவீச்சாளர்கள்: டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, டி நடராஜன்

SRH vs RR Dream11 Prediction, Today Match Prediction, Today Match SRH vs RR, SRH vs RR Dream11 Team, Fantasy Cricket Tips, SRH vs RR Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Sunrisers Hyderabad vs Rajasthan Royals

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News