SL vs AFG: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு; அணியை வழிநடத்தும் தனஞ்செயா டி சில்வா!

Updated: Wed, Jan 31 2024 15:01 IST
Image Source: Google

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 02ஆம் தேதி கொழும்புவில் நடைபெறவுள்ளது. மேலும் இலங்கை அணிக்கெதிராக ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து இத்தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர வீரர் ரஷித் கான் காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை. அதேசமயம் இந்த அணியில் நான்கு அறிமுக வீரர்களுக்கு ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வாய்ப்பு கொடுத்துள்ளது. 

இந்நிலையில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கை அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக தனஞ்செயா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் அணியின் துணைக்கேப்டனாக குசால் மெண்டிஸ் செயல்படவுள்ளார். மேலும் இந்த அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ், திமுத் கருணரதேன், தினேஷ் சண்டிமல் ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. 

மேலும் இலங்கை டெஸ்ட் அணியில் லஹிரு உதார, சாமிக்கா குணசேகர மற்றும் மிலன் ரத்நாயக்க ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அணியில் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் கசுன் ரஜிதா, ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் அணியை வழிநடத்தவுள்ளனர். 

 

இலங்கை அணி: தனஞ்சய டி சில்வா (கே), குசால் மெண்டிஸ், திமுத் கருணாரத்ன, நிஷான் மதுஷ்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், சதீரா சமரவிக்ரமா, ரமேஷ் மெண்டிஸ், அசித்த ஃபெர்னாண்டோ, விஷ்வா ஃபெர்னாண்டோ, கசுன் ரஜிதா, கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய, லஹிரு உதார, சாமிக்கா குணசேகர, மிலன் ரத்நாயக்க.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை