ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் ஜூன் 7, 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 டி20போட்டிகள் நடக்கின்றன.

Advertisement

இந்த டி20 தொடருக்கான இலங்கை அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ஷனாகா தலைமையிலான இலங்கை அணியில் ஐபிஎல்லில் அபாரமாக விளையாடிய வனிந்து ஹசரங்கா மற்றும் பானுகா ராஜபக்சா ஆகிய இருவரும் கம்பேக் கொடுத்துள்ளனர்.

Advertisement

அதேபோல் ஆரோன் ஃபீஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகலும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை கொழும்புவில் நடைபெறுகிறது. இதையடுத்து இப்போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் நீண்ட நாள்களுக்கு பிறகு பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார்.

அதேபோல் ஐபிஎல் தொடரில் கலக்கிய மேக்ஸ்வெல், ஸ்டொய்னிஸ், ஹசில்வுட், மேத்யூ வேட் ஆகியோரும் இந்த பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் முதல் டி20 போட்டிக்கான இலங்கை அணியின் பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் கலக்கிய வநிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்‌ஷனா, துஷ்மந்த சமீரா, சமிகா கருணரத்னே, பானுகா ராஜபக்‌ஷ ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர்.

இலங்கை பிளெயிங் லெவன்: பதும் நிஸ்ஸங்க, தனுஷ்க குணதிலக்க, சரித் அசலங்கா, குசல் மெண்டிஸ், பானுக ராஜபக்ச, தசுன் ஷனக (கே), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, மஹீஷ் தீக்ஷனா, நுவான் துஷார.

ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன்: ஆரோன் பின்ச் (கே), டேவிட் வார்னர், மிட்ச் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஜோஷ் ஹேசில்வுட்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News