ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று  நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்தது.

Advertisement

தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். ரோஹித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் விராட் கோலி மற்றும் ஷுப்மன் கில் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய போதிலும் சதமடிக்கும் வாய்ப்பினை இருவருமே தவறவிட்டனர். ஷுப்மன் கில் 92 ரன்களிலும் (11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), விராட் கோலி 88 ரன்களிலும் (11 பவுண்டரிகள்) ஆட்டமிழந்தனர்.

Advertisement

அதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தார். அதிரடியாக சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதனால் அணியின் ஸ்கோர் 300  ரன்களைக் கடந்தது. கே எல் ராகுல் 21 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 56 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து தில்ஷன் மதுஷங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் ரவீந்திர ஜடேஜா 24 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

 

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய தில்ஷன் மதுஷங்கா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். துஷ்மந்தா சமீரா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

இதையடுத்து, 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி முதலிரண்டு ஓவர்களிலேயே அணியின் மொத்த பலத்தையும் இழந்தது. அதன்படி ஜஸ்ப்ரித் பும்ரா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே பதும் நிஷங்கா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

Advertisement

 

அதன்பின் 2ஆவது ஓவரை வீசிய முகமது சிராஜ் தனது முதல் பந்தில் திமுத் கருணரத்னேவை வழியனுப்ப, அதே ஓவரின் 5ஆவது பந்தில் சதீரா சமரவிக்ரமாவின் விக்கெட்டை வீழ்த்தினார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் குசால் மெண்டிஸும் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் சிராஜிடம் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சரித் அசலங்கா ஒரு ரன்னிலும், அடுத்து வந்த துஷன் ஹெமந்தா முதல் பந்திலேயும் என அடுத்தடுத்து முகமது ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் இலங்கை அணி முதல் பத்து ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து வெறும் 14 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.  

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News