இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று பல்லகலேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.

Advertisement

அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு கைடானோ - சகப்வா இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தது. இதில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கைடானோ 42 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சகப்வா அரைசதம் கடந்து 72 ரன்களைச் சேர்த்தார். 

Advertisement

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சீன் வில்லியம்ஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 9 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 100 ரன்களையும், சகப்வா 72 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் சமிகா கருணரத்னே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

அதன்பின் கடின இலக்கை துரத்திய இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிஷங்கா 75 ரன்களைச் சேர்த்து அபார தொடக்கத்தைக் கொடுத்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த தினேஷ் சண்டிமல் - சரித் அசலங்கா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இதில் இருவரும் அரைசதம் கடந்தனர். 

Advertisement

இதன்மூலம் 48.4 ஓவர்களில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை மட்டும் இலக்கை எட்டியது. இதில் அதிகபட்சமாக தினேஷ் சண்டிமல், பதும் நிசங்கா தலா 75 ரன்களைச் சேர்த்து இலங்கை அணி வெற்றிக்கு உதவினர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News