சாலைப்பாதுகாப்பு உலக சீரிஸ் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை லெஜண்ட்ஸ் - வங்கதேச லெஜண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற வங்கதேச லெஜண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய இலங்கை லெஜண்ட்ஸ் அணிக்கு ஜெயசூர்யா - மஹேல உடவத்த இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய திலகரத்னே தில்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார்.

Advertisement

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை லெஜண்ட்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்களைச் சேர்த்து அசத்தியது. இதில் அதிகபட்சமாக தில்சன் 51 ரன்களைச் சேர்த்திருந்தார். 

இதையடுத்து இமாலய இலக்கை துரத்திய வங்கதேச லெஜண்ட்ஸ் அணியில் அஃப்தாப் அஹ்மத் - நசிமுதின் இணை சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அதன்பின் களமிறங்கிய துஷர் இம்ரான் சிறப்பாக விளையாடி அரைசதம்  கடந்தார்.

ஆனால் மற்ற வீரர்களால் இலங்கை பந்துவீச்சுக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச லெஜண்ட்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இலங்கை தரப்பில் கேப்டன் திலகரத்னே தில்சன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் இலங்கை லெஜண்ட்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியைப் பதிவுசெய்தது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News