இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி பல்லகலேவில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா 14 ரன்களிலும், தனுஷ்கா குனத்திலகா 18 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் - தனஞ்செய டி செல்வா பொறுப்பாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்தனர்.

Advertisement

பின்னர் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டி சில்வா ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து குசால் மெண்டிஸும் 36 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அடுத்து களமிறங்கிய சரித் அசலங்கா 13 ரன்களோடு விக்கெட்டை இழந்தார்.

இதையடுத்து வந்த கேப்டன் தசுன் ஷனகா அதிரடியாக விளையாடி 34 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் வந்த வீரர்களும் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

அதன்பின் 49.4 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் தடைப்பட்டது. தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஆட்டம் பாதிக்கப்பட்டது.

இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு டக்வெர்த் லூயிஸ் முறைப்படி 43 ஓவர்களில் 213 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதன்பின் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் 14 ரன்களிலும், டேவிட் வார்னர் 37 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.

அதன்பின் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 28, ட்ரேவிஸ் ஹெட் 23, மார்னஸ் லபுசாக்னே 18, அலெக்ஸ் கேரி 15 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் அதிரடியாக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல்லும் 30 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் 37.1 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்களை மட்டுமே சேர்த்தது. இலங்கை தரப்பில் சமிகா கருணரத்னே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Advertisement

இதன்மூலம் இலங்கை அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் இலங்கை அணி தொடரை சமன் செய்துள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News