வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை வங்கதேச அணி கைப்பற்றி அசத்தியது. இதைனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 

Advertisement

அதன்படி மார்ச் 22ஆம் தேதி சில்ஹெட்டில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் 30ஆம் தேதி சட்டோகிராமில் தொடங்கவுள்ளது. 

Advertisement

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக இத்தொடர் நடைபெற்றுவருவதால், இப்போட்டியின் முடிவுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அணி 68.51 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தையும், ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், நியூசிலாந்து அணி 50 சதவீத புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர்.

அதைத்தொடர்ந்து 36.66 புள்ளிகளுடன் பாகிஸ்தான் நான்காம் இடத்தையும், 33.33 புள்ளிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 5ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. இதில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணி 33.33 புளிகளுடன் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் வங்கதேச அணியும் 33.33 புள்ளிகளுடன் 7ஆம் இடத்தில் நீடித்தி வருகிறது. 

இப்பட்டியளின் கடைசி இரண்டு இடங்களில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடம்பிடித்துள்ளன. இதனால் இலங்கை அணி வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றிபெறும் பட்சத்தில் அந்த அணி 4ஆம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பும் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News