PAK vs SL: திமுத் கருரணத்னே தலைமையில் டெஸ்ட் அணி அறிவிப்பு!

Updated: Thu, Jul 14 2022 16:11 IST
Sri Lanka Names 18-Member Squad For Two-Match Test Series Against Pakistan (Image Source: Google)

ஆஸ்திரேலிய அணி அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அந்த தொடர் 1-1 என சமனடைந்தது.

முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 39 ரன்கள் ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்று 1-1 என தொடரை சமன் செய்தது.

அடுத்ததாக பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இலங்கை - பாகிஸ்தான் இடையே 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. முதல் போட்டி வரும் 16ஆம் தேதி தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றி உத்வேகத்துடன் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இலங்கை அணி. 

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணரத்னே தலைமையில் 18 வீரர்களை கொண்ட இலங்கை டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை டெஸ்ட் அணி: திமுத் கருணரத்னே (கேப்டன்), பதும் நிசாங்கா, ஒஷாடா ஃபெர்னாண்டோ, ஆஞ்சலோ மேத்யூஸ், குசால் மெண்டிஸ், தனஞ்செயா டி சில்வா, காமிந்து மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்லா, தினேஷ் சண்டிமால், ரமேஷ் மெண்டிஸ், மஹீஷ் தீக்‌ஷனா, காசுன் ரஜிதா, விஷ்வா ஃபெர்னாண்டோ, அசிதா ஃபெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்கா, பிரபாத் ஜெயசூரியா, துனித் வெல்லாலகே, ஜெஃப்ரி வாண்டர்சே.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை