டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இலங்கை அணி ஓமனில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. 

Advertisement

இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஓமன் அணியில் ஜடிந்தர் சிங் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். 

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த காஷ்யப் - அகிப் இலியாஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இலியாஸ் அரைசதம் அடித்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஓமன் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக அகிப் இலியாஸ் 60 ரன்களை எடுத்தார். இலங்கை தரப்பில் லஹிரு குமாரா, கருணர்த்னே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை துரத்திய இலங்கை அணி தொடக்கத்திலேயே நிஷங்கா 26, சண்டிமல் 18, சரித் அசலங்கா 5 ஆகியோரது விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் அவிஷ்கா ஃபெர்னாண்டோ - ராஜபக்க்ஷ இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது.. 

இறுதியில் சமிகா கருணரத்னே தனது பங்கிற்கு 3 சிக்சர்களை விளாசி அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். இதன் மூலம் 17.3 ஓவர்களிலேயே இலங்கை அணி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News