நியூசிலாந்து அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியதுடன், தொடரையும் வென்றது. 

Advertisement

இதனையடுத்து நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்காக டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இதனையடுத்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை மறுநாள் பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது. 

Advertisement

இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே நியூசிலாந்து அணியின் அடுத்த சுற்றுப்பயணத்திற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அதன்படி நியூசிலாந்து அணி எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. 

அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நவம்பர் 09ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது நவம்பர் 13ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இதில் டி20 தொடரின் இரண்டு போட்டிகளும் தம்புளாவில் நடைபெறவுள்ளது. அதேசமயம் ஒருநாள் தொடரின் முதல் போட்டி மட்டும் தம்புளாவில் நடைபெறவுள்ள நிலையில், இரண்டாவது மற்றும் மூனறாவது ஒருநாள் போட்டிகள் பல்லகலேவில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இலங்கை - நியூசிலாந்து தொடர் அட்டவணை

  • முதல் டி20 போட்டி - நவம்பர் 09 - தம்புளா
  • இரண்டாவது டி20 போட்டி - நவமபர் 10 - தம்புளா
  • முதல் ஒருநாள் போட்டி - நவம்பர் 13 - தம்புளா
  • இரண்டாவது ஒருநாள் போட்டி - நவம்பர் 17 - பல்லகலே
  • மூன்றாவது ஒருநாள் போட்டி - நம்பர் 19 - பல்லகலே
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News