ஏழாவது சீசன் டி20 உலகக்கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

Advertisement

இதில் நாளை நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணி, வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. 

Advertisement

போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - இலங்கை vs வங்கதேசம்
  • இடம் - ஷார்ஜா
  • நேரம் - மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம் 

தசுன் ஷான்கா தலைமையிலான இலங்கை அணி, இந்த தொடரில் நடைபெற்று மூன்று தகுதிச்சுற்று போட்டிகளிலுமே வெற்றிபெற்று சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

அதிலும் பதும் நிஷங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பானுகா ராஜபக்க்ஷா ஆகியோர் பேட்டிங்கில் தொடர்ந்து அசத்தி வருகின்றனர். பந்துவீச்சில் ஹசரங்கா, லஹிரு குமாரா, தீக்‌ஷனா என வலிமையாக உள்ளதால் நிச்சயம் இலங்கை அணி இப்போட்டியில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

அதேசமயம் முஹ்மதுல்லா தலைமையிலான வங்கதேச அணி முதல் சுற்றின் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது. 

இருப்பினும் அந்த அணியின் பேட்டிங் வரிசை சற்று ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர். ஆனாலும் பந்துவீச்சில் ஷாகிப் அல் ஹசன், முஸ்தபிசூர் ரஹ்மான் இருப்பது அணிக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்கிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 11
  • இலங்கை வெற்றி - 7
  • வங்கதேச வெற்றி - 4
Advertisement

உத்தேச அணி

இலங்கை - பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, சரித் அசலங்கா, அவிஷ்க ஃபெர்னாண்டோ, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக (கே), வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, மஹீஷ் தீக்ஷன, லஹிரு குமார.

வங்கதேசம் - முகமது நைம், லிட்டன் தாஸ், மஹேதி ஹசன், ஷாகிப் அல் ஹசன், நூருல் ஹசன், அஃபிஃப் ஹொசைன், மஹ்முதுல்லா (கே), முஷ்பிக்கூர் ரஹீம், முகமது சைபுதீன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான்.

Advertisement

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - முஷ்பிக்கூர் ரஹீம், குசல் பெரேரா
  • அடித்தவர்கள் - நைம் ஷேக், மஹ்மதுல்லா, பானுகா ராஜபக்ச, பாதும் நிசங்க
  • ஆல் -ரவுண்டர்கள் - மஹிதி ஹசன், ஷாகிப் அல் ஹசன், வானிந்து ஹசரங்கா
  • பந்துவீச்சாளர்கள் - முஸ்தபிசூர் ரஹ்மான், மகேஷ் தீக்ஷனா.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News