எட்டாவது சீசன் டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுவிப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று (அக்.18) இரண்டு லீக் ஆட்டங்கள் ஜீலாங்கில் நடக்கின்றன. 

Advertisement

இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் 6ஆவது லீக் ஆட்டத்தில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை-சுன்டன்காபொயில் ரிஸ்வான் தலைமையிலான ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் சந்திக்கின்றன. இலங்கை அணி முதல் ஆட்டத்தில் நமிபியாவிடம் தோல்வி கண்டது. இதேபோல் ஐக்கிய அரபு அமீரக அணி, நெதர்லாந்திடம் பணிந்தது. 

Advertisement

அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இரு அணிகளும் கடுமையாக வரிந்துகட்டும். முதல் ஆட்டத்தில் சொதப்பிய இலங்கை அணி இந்த ஆட்டத்தில் எழுச்சி பெற்று அமீரகத்துக்கு 'செக்' வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இவ்விரு அணிகளும் இதற்கு முன்பு சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஒரே ஒருமுறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இலங்கை அணி வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இலங்கை vs ஐக்கிய அரபு அமீரகம்
  • இடம் - கர்தினியா பார்க், ஜீலாங்
  • நேரம் - மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)

உத்தேச அணி

Advertisement

இலங்கை: குசல் மெண்டிஸ், பாத்தும் நிஸ்ஸங்க, பானுக ராஜபக்ஷ, குணதிலகா, சரித் அசலங்கா, தசுன் ஷனக (கே), வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷனா, சமிக கருணாரத்னே, துஷ்மந்தா சமீர, மதுஷன்

ஐக்கிய அரபு அமீரகம்: முஹம்மது வசீம், சிராக் சூரி, விருத்தியா அரவிந்த், சுண்டங்கபோயில் ரிஸ்வான்(சி), பாசில் ஹமீத், ஜாவர் ஃபரித், அயன் அப்சல் கான், காஷிப் தாவுத், கார்த்திக் மெய்யப்பன், ஜுனைத் சித்திக், ஜாகூர் கான்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - குசல் மெண்டிஸ்
  • பேட்டர்ஸ் – பாத்தும் நிஸ்ஸங்க, முஹம்மது வசீம், பானுகா ராஜபக்ஷ, சிராக் சூரி
  • ஆல்ரவுண்டர்கள் – தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க
  • பந்துவீச்சாளர்கள் – ஜுனைட் சித்திக், தீக்ஷனா, கார்த்திக் மெய்யப்பன்
Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News