இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இந்த சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அந்தவகையில் இத்தொடரின் புள்ளி பட்டியலில் இந்திய அணி 62.82 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.
அதனைத்தொடர்ந்து இலங்கை அணி 55.56 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்க அணியானது 54.17 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், நியூசிலாந்து அணி 50 புள்ளிகளுட்ன் இப்பட்டியலில் 5ஆம் இடத்திலும் தொடர்ந்து வருகின்றன. இதனால் புள்ளிப்பட்டியலில் எந்த இரண்டு அணிகள் டாப் இடங்களைப் பிடித்து இறுதிப்போட்டியில் விளையாடும் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்கள் மத்தியில் தற்போதிலிருந்தே எழத்தொடங்கியுள்ளன.
அதன் ஒருபகுதியாக இம்மாத இறுதியில் ஆஸ்திரேலிய அணியானது இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது நவம்பர் 15 தொடங்கும் இத்தொடரானது அடுத்த ஆண்டு ஜனவரி 06ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், ஒரே ஒரு ஒருநாள் போட்டி தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 29ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் கலேவில் ந்டைபெறவுள்ளது.
அதேசமயம் இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு ஒருநாள் போட்டியானது பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போட்டியான மைதானத்தை இதுவரை உறுதிசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளதால், இத்தொடரில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளனர்.
Also Read: Funding To Save Test Cricket
இலங்க - ஆஸ்திரேலியா தொடர்
- முதல் டெஸ்ட் - ஜனவரி 29 - பிப்ரவரி 02, 2025 - கலே
- இரண்டாவது டெஸ்ட் - பிப்ரவரி 06 - பிப்ரவரி 1, 2025 - கலே
- ஒருநாள் போட்டி, பிப்ரவரி 13, 2025