குசால் மெண்டிஸ் சாதனை: இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் குசால் மெண்டிஸ் 2025 டி20 ஆசிய கோப்பையில் தனது பேட்டிங்கால் இரண்டு சிறப்பு சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

Advertisement

ஆசிய கோப்பை தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை அணி வங்கதேசத்தை எதிர்கொள்ளவுள்ளது. மேலும் இலங்கை அணி நடப்பு சீசனில் முதல் போட்டியில் விளையாடவுள்ளது. இதனல் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடர் மூலம் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குசால் மெண்டிஸ் சில சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதுவரை இலங்கை அணிக்காக அவர் 84 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2,076 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் இலங்கை அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார். 

இந்நிலையில்,  2025 டி20 ஆசிய கோப்பையின் போது குசல் மெண்டிஸ் 14 சிக்ஸர்களை அடிக்க முடிந்தால், அவர் டி20 கிரிக்கெட்டில் தனது 100 சிக்ஸர்களை நிறைவு செய்வார். இதனை அவர் பூர்த்தி செய்யும் பட்சத்தில் இலங்கை அணிக்காக 100 சிக்ஸர்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார். இதுநாள் வரை எந்த இலங்கை வீரரும் தனது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை அணிக்காக டி20 போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

  • குசால் மெண்டிஸ் - 84 டி20 போட்டிகளில் 86 சிக்ஸர்கள்
  • தசுன் ஷனகா - 108 டி20 போட்டிகளில் 74 சிக்ஸர்கள்
  • குசல் பெரேரா - 82 டி20 போட்டிகளில் 68 சிக்ஸர்கள்
  • சரித் அசலங்கா - 64 டி20 போட்டிகளில் 61 சிக்ஸர்கள்

டி20யில் 200 பவுண்டரிகள்:

Advertisement

இதுதவிர 2025 ஆசிய கோப்பையின் போது குசல் மெண்டிஸ் 20 பவுண்டரிகள் அடித்தால், அவர் டி20 சர்வதேச போட்டியில் 200 பவுண்டரிகளை அடிப்பார். இதனை அவர் எட்டும் பட்சத்தில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக இந்த சாதனையை படைத்த நான்காவது வீரர் எனும் பெருமையை பெறுவார். இலங்கையைப் பொறுத்தவரை, திலகரத்ன தில்ஷன் (223 பவுண்டரிகள்), குசல் பெரேரா (205 பவுண்டரிகள்), மற்றும் பதும் நிஷங்கா (202 பவுண்டரிகள்) மட்டுமே 200 அல்லது அதற்கு மேற்பட்ட பவுண்டரிகளை அடித்துள்ளனர்.

Also Read: LIVE Cricket Score

இலங்கை அணி: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நுவனிடு பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், கமில் மிஷாரா, தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, சாமிக்க கருணாரத்ன, மஹிஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ, நுவான் துஷார, மதிஷ பத்திரன

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News