சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் திசாரா பெரேரா!

Updated: Mon, May 03 2021 16:53 IST
Image Source: Google

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா. இவர் இலங்கை அணிக்காக இதுவரை 166 ஒருநாள், 84 டி20 , 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 ஆயிரம் ரன்களையும், 237 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 

அதேசமயம் 2014ஆம் ஆண்டு இலங்கை அணி டி20 உலக கோப்பையை வெல்வதற்கும் முக்கிய காரணமாக திகழ்ந்தார். மேலும் ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில் 32 வயதேயான திசாரா பெரேரா இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இத்தகவலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுதி செய்துள்ளது. 

இருப்பினும் தனது சர்வதேச ஓய்வுக்கு பிறகும் டி20 லீக் போட்டிகளில் களமிறங்குவேன் என்று பெரேரா அறிவித்துள்ளார். 

முன்னதாக இவர் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளிலும் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::