இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கலேவில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் - உஸ்மான் கவாஜா ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். இதில் டிராவிஸ் ஹெட் 57 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னேவும் 20 ரன்களுடன் நடையைக் கட்டினார்.

Advertisement

இதனால் ஆஸ்திரேலிய அணி முதல்நாள் உணவு இடைவேளையின் போது 2 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களைச் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் உஸ்மான் கவாஜா 65 ரன்களுடனும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் ஜெஃப்ரி வண்டர்சே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஸ்டீவ் ஸ்மித் இமாலய மைல் கல்லை எட்டியுள்ளார்.

Advertisement

அதன்படி இப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன் எடுத்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 10000 ரன்களைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்களைக் கடந்த ஆஸ்திரேலியாவின் நான்காவது வீரர் மற்றும் உலகின் 15ஆவது வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலிய அணிக்காக ரிக்கி பாண்டிங், ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக் ஆகியோர் இந்த மைல் கல்லை எட்டியுள்ளனர். 

இதுதவிர்த்து சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 10,000 ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் 205 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அணியின் முன்னாள் வீரரும் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டையும் பின்னுக்கு தள்ளியுள்ளார். இதற்கு முன் ராகுல் டிராவிட் 206 இன்னிங்ஸ்களில் 10ஆயிரம் ரன்களை கடந்து மூன்றாம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா மற்றும் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்காரா ஆகியோர் தலா 195 இன்னிங்ஸ்களில் 10ஆயிரம் ரன்களைக் கடந்து முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் 196 இன்னிங்ஸ்களில் 10ஆயிரம் ரன்களைக் கடந்த இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள்

  • 195 - சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, குமார் சங்கக்காரா
  • 196 – ரிக்கி பாண்டிங்
  • 205* – ஸ்டீவ் ஸ்மித்
  • 206 – ராகுல் டிராவிட்
Advertisement

ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), ஜோஷ் இங்கிலிஸ், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், மேத்யூ குஹ்னேமன், நாதன் லையன், டாட் மர்ஃபி

இலங்கை பிளேயிங் லெவன்: திமுத் கருணாரத்னே, ஓஷதா ஃபெர்னாண்டோ, தினேஷ் சண்டிமால், ஏஞ்சலோ மேத்யூஸ், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா(கேப்டன்), குசால் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா, நிஷான் பீரிஸ், ஜெஃப்ரி வான்டர்சே, அசிதா ஃபெர்னாண்டோ.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News