ரிவ்யூ எடுக்க தவறிய ஸ்டீவ் ஸ்மித்; வைரலாகும் காணொளி!

Updated: Sun, Nov 19 2023 20:17 IST
Image Source: Google

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 240 ரன்களை சேர்த்தது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸ்-ஐ தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் 7 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் முகமது ஷமி வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடிய நிலையில் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதனால் போட்டி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலிய அணி. அப்படியாக ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தை எதிர்கொண்ட ஸ்டீவன் ஸ்மித், கணிப்பில் செய்த பிழை காரணமாக எல்.பி.டபிள்யூ. முறையில் தனது விக்கெட்டை இழந்தார். களத்தில் இருந்த நடுவர் விக்கெட் கொடுக்க, அதிர்ச்சியில் இருந்த ஸ்டீவன் ஸ்மித் மறுமுனையில் விளையாடி வந்த டிராவிஸ் ஹெட்-இடம் ரிவ்யூ எடுக்கட்டுமா என கேட்டார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

ஆனால் சந்தேகத்தில் இருந்த ஹெட் வேண்டாம் என்ற வகையில் பதில் அளிக்க, சற்றும் யோசிக்காமல் ஸ்டீவன் ஸ்மித் களத்தை விட்டு வெளியேறினார். பிறகு வெளியான ரி-பிளேவில் ஸ்டீவன் ஸ்மித் அவுட் ஆன பந்து ஸ்டம்ப்களை அடிக்க தவறியது தெரியவந்தது. அந்த வகையில், அவர் ரிவ்யூ எடுத்திருந்தால் விக்கெட்டை தக்கவைத்துக் கொண்டிருக்க முடியும். இருப்பினும் அதன்பின் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் - மார்னஸ் லபுஷாக்னே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை