டெஸ்ட் போட்டியில் விளையாட நான் இப்போது தயாராக இருக்கிறேன் - ஸ்டீவ் ஸ்மித்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.
அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதுமட்டுமின்றி இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரையும் வென்று அசத்தியுள்ளதால், மூன்றாவது முறையாகவும் இத்தொடரை கைப்பற்றி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் அறிமுக வீரர்கள் அபிமன்யூ ஈஸ்வரன், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் பிரஷித் கிருஷ்ணாவுக்கும் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் நியூசிலாந்து தொட்ரில் இடம்பிடித்துள்ள அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் அகியோர் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் ஆஸ்திரேலிய அணியும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முழுமையாக தயாராகிவிட்டதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “பயிற்சியில் எனது கடைசி வாரம் மிகவும் நன்றாக இருந்தது. நான் ஒரு நல்ல இடத்தில் இருப்பதைப் போலவும், நன்றாக நகர்வதைப் போலவும் உணர்கிறேன், கிரீஸில் நான் மிகவும் சமநிலையாக இருக்கிறேன், மேலும் நான் பேட்டிங் செய்யும் போது என்க்கு பிடித்தமான ஷாட்டுகளை விளையாட முடிந்தது.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் நான் விளையாடிய விதத்தில் மகிழ்ச்சியடைந்தேன். இன்னும் கொஞ்ச நேரம் பேட்டிங்க் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்திய தொடருக்கு நான் தயார். நான் இப்போது தயாராக இருக்கிறேன். ஆம், என்னால் நாளையே டெஸ்ட் போட்டியில் விளையாட முடியும். அதனால் நான் ஒரு நல்ல இடத்தில் இருப்பதாக உணர்கிறேன். ஏனெனில் கடந்த ஒரு வாரமாக நான் சிறப்பான பயிற்சியைப் பெற்றுள்ளேன். நான் சில விஷயங்களைச் சரியாக செய்ய முயற்சித்தேன். அதில் தற்போது வெற்றியும் கண்டுள்ளேன். நான் இப்போது நல்ல ஃபார்மில் இருப்பதாக உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.