தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 என்றழைக்கப்படும் டி20 தொடரை நடத்தி வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது. அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் ஏலத்திற்கு முன்னரே வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம் காட்டின. 

Advertisement

அந்தவகையில் எதிர்வரவுள்ள மூன்றாவது சீசன் எஸ்ஏ20 லீக் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிக்காக விளையாட இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் ஆகியோரை ஏலத்திற்கு முன்னதாக அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது. முன்னதாக பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரில் ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளர். 

Advertisement

மேலும் அவர் நடப்பு தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நார்த்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடி வந்த நிலையில் காயம் காரணமாக தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், டிரெண்ட் போல்ட் இதற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் பிரான்சைஸில் சார்பில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், மேஜர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்காகவும், ஐஎல்டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். 

இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் பிரான்சைஸிற்காக எம்ஐ கேப்டவுன் அணியில் விளையாடவுள்ளார். அதேசமயம் எதிர்வரும் எஸ்ஏ20 லீக் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியானது டெவால்ட் ப்ரீவிஸ், கானர் எஸ்டெர்ஹூய்சென், தாமஸ் கேபர், ஜார்ஜ் லிண்டே, டெலானோ போட்ஜீட்டர், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், ரஸ்ஸி வான் டெர் டுசென் உள்ளிட்டோரை தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News