ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம்!

Updated: Mon, Jul 01 2024 13:15 IST
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம்! (Image Source: Google)

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணியானது ஜூலை 5 முதல் ஜிம்பாப்வேக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாட உள்ளது.

இத்தொடருக்கான இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக தொடக்க வீரர் ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். 

மேற்கொண்டு சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான், கலீத் அஹ்மத், முகேஷ் குமார் ஆகியோருடன், ரியான் பராக், அபிஷேக் சர்மா, நிதீஷ் ரெட்டி, துஷார் தேஷ்பாண்டா, துருவ் ஜுரெல் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கும் இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் இடம்பிடித்துள்ள அறிமுக வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், இத்தொடரில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் இத்தொடர் முதல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பார் என கூறப்பட்டது. 

இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் யார் என்பதை தேர்வு செய்வதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதான் காரணமாக, இலங்கை தொடரின் போது அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஏனெனில் பயிற்சியாளர் பதவிக்கு கௌதம் கம்பீர் மற்றும் டபிள்யூவி ராமன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருவதன் காரணமாக இம்முடிவானது எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுகிறது. 

இதன் காரணமாக வரவுள்ள ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண் செயல்படுவார் என்ற அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, “பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர் நியமனம் விரைவில் நடைபெறும். சிஏசி நேர்காணல்களை நடத்தி இரண்டு பெயர்களை தேர்வு செய்துள்ளது. மும்பை திரும்பியதும் இதுகுறித்து முடிவெடுப்போம்” என தெரிவித்துள்ளார். 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்திய அணி: ஷுப்மான் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரல், ஷிவம் தூபே, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை