இந்திய அணியின் இந்நிலைமைக்கு இவர்கள் தான் காரணம் - சுனில் கவாஸ்கர் சாடல்!

Updated: Fri, Jun 09 2023 11:50 IST
Sunil Gavaskar gives brutal assessment of Rohit's cheap dismissal in WTC final vs Australia! (Image Source: Google)

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லண்டனிலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் குவித்த நிலையில் இந்திய அணி 151 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இதில் டாப் வரிசையில் முதல் நான்கு வீரர்கள் 16 ரன்களை கூட தொடவில்லை. கேப்டான் ரோஹித் சர்மா 15 ரன்களிலும், ஷுப்மன் கில் 13 ரன்களிலும் புஜாரா, விராட் கோலி ஆகியோரு 14 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இந்த நிலையில் இந்திய அணியை வெளுத்து வாங்கிய சுனில் கவாஸ்கர், பேட்ஸ்மேன் தவறால்தான் ஆஸ்திரேலியாவுக்கு விக்கெட் கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “கில் சிறப்பான ஃபார்மில் இருந்தார். அவரை இந்திய அணி இழந்தது நிச்சயம் பெரிய இடி தான். இந்திய வீரர்கள் பந்தை தவறாக கணித்து ஆட்டம் இழந்தார்கள். ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரிலே நன்றாக விளையாடவில்லை. இதனால் அவர் ஆட்டம் இழந்தது குறித்து எனக்கு பெரிய ஆச்சரியம் இல்லை. ஆனால் புஜாரா ஸ்டெம்பை கூட சரியாக மறைத்து விளையாடாமல் போல்டானது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த விக்கெட்டை இந்திய அணி தவிர்த்து இருக்கலாம். இதற்காக ஆஸ்திரேலிய வீரர்களை நாம் பாராட்ட வேண்டும். அவர்கள் இந்திய அணியை விட இன்னும் புல் லெங்தில் பந்துகளை வீசினார்கள். ரஹானே நல்ல ஃபார்மில் இருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் கூட வேறொரு ரஹானேவை தான் நாம் பார்த்தோம்.

எதிரணி பந்துவீச்சை அட்டாக் செய்ய ரஹானே முயன்றார். ஆரம்ப காலத்தில் இப்படித்தான் அவர் விளையாடினார். இந்திய அணியில் முக்கியமான வீரர் என்பதை அவர் உணர்ந்து கொண்டு பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அவருக்கு மறுபிறவி கிடைத்துள்ளது. 

ஜனவரி மாதம் 2022 ஆம் ஆண்டு தான் அவர் கடைசியாக டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். தற்போது இந்திய அணிக்கு மீண்டும் திரும்பி அவர் விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் கிடைத்தது. இது போன்ற பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ஷ்டம் தேவை. ரஹானே தொடர்ந்து விளையாடி பெரிய ஸ்கோர் அடித்து ஆஸ்திரேலியாவின் இலக்கு அருகில் வரை இந்தியாவை கொண்டு செல்வார் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை