ஐபிஎல் தொடரில் வரலாற்று சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!

Updated: Thu, May 01 2025 22:46 IST
Image Source: Google

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் துணைக்கேப்டன் சூர்யகுமார் யாதவ் வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். 

இந்த போட்டியில் 23 பந்துகளை எதிர்கொண்ட சூர்யகுமார் யாதவ் 4 பவுண்டரி 3 சிக்ஸர்கள் என 48 ரன்களைச் சேர்த்து அசத்தி இருந்தார். இந்நிலையில் இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் 25 ரன்களைக் கடந்ததன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் தொடர்ச்சியாக 11 இன்னிங்ஸ்களில் 25 அல்லது அதற்கு மேல் ரன்கள் எடுத்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு கடந்த 2014 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய ராபின் உத்தப்பா தொடர்ச்சியாக 10 முறை 25+ ஸ்கோர்களை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனைத் தற்போது சூர்யகுமார் யாதவ் முறியடித்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு நடப்பு ஐபிஎல் தொடரில் அபாரமான செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ் 475 ரன்களைக் குவித்து அதிக ரன்களை எடுத்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றினார்.

இந்த போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ரியான் ரிக்கெல்டன் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இதில் ரிக்கெல்டன் 61 ரன்னிலும், ரோஹித் சர்மா 53 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் துணைக்கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலா 48 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர்.

இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 217 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதனால் அந்த அணி தற்போது வரையில் 82 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து ஏறத்தாழ தோல்வியின் விழிம்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, நிதிஷ் ராணா, ரியான் பராக்(கேப்டன்), துருவ் ஜூரல், ஷிம்ரான் ஹெட்மையர், ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால், ஃபசல்ஹாக் ஃபரூக்கி

இம்பாக்ட் வீரர்கள்: ஷுபம் துபே, துஷார் தேஷ்பாண்டே, குணால் சிங் ரத்தோர், யுத்வீர் சிங் சரக், குவேனா மபாகா

மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்: ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கேப்டன்), நமன் திர், கார்பின் போஷ், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா

Also Read: LIVE Cricket Score

இம்பாக்ட் வீரர்கள்: ராஜ் பாவா, சத்தியநாராயண ராஜு, ராபின் மின்ஸ், ரீஸ் டாப்லி, கர்ண் ஷர்மா

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை