ஐபிஎல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் சூர்யகுமார் யாதவ். இவருக்கு இந்த ஆண்டு துவக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. தான் அறிமுகமான முதல் போட்டியில் தான் எதிர்கொண்ட ஆர்ச்சரின் முதல் பந்தையே சிக்ஸராக தூக்கி அடித்தார்.அந்த போட்டியில் இவர் அரைசதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

Advertisement

இந்நிலையில் ஜூலை மாதம் நடக்க உள்ள இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடருக்கும் இவரது பெயர் முதலாவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்நிலையில் இன்று இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கேள்வி மற்றும் பதில் உரையாடலை நிகழ்த்தினார். அதில் பல்வேறு ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் ஒரு ரசிகர் உங்களுடைய உத்வேகம் யார் என்று ஒரு கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சூர்யகுமார் யாதவ் தன்னுடைய உத்வேகமான நபர் விராட் கோலி என்று கூறியுள்ளார்.

சூர்யகுமார் யதாவின் இப்பதிவானது சில நெடிகளிலேயே சமூக வலைதளத்தை ஆக்கிரமித்தது. ஏனெனில் சூர்யகுமார் யாதவ் மட்டுமல்ல இந்தியாவில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற கனவோடு இருக்கும் பல இளம் வீரர்களுக்கும் தற்போது இந்திய அணியில் இணைந்து உள்ள பல வீரர்களுக்கும் நிச்சயமாக விராட் கோலி ஒரு உத்வேகம் என்பது தான் இதற்கான பதிலும் கூட..

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News