சூர்யகுமார் யாதவுக்கு ஆதரவராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக்!

Updated: Mon, Mar 20 2023 16:13 IST
'Suryakumar Yadav is non-negotiable in ODIs': Dinesh Karthik (Image Source: Google)

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. 2ஆவது மற்றும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். ஆனால், 4ஆவது டெஸ்ட் போட்டியில் 3ஆம் நாள் ஆட்டத்திற்கு அவர் களமிறங்க வரவில்லை. இதையடுத்து, முதுகு வலி காரணமாக அவர் எஞ்சிய நாட்களில் விளையாட வரவில்லை. டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரிலிருந்தும் ஷ்ரேயாஸ் ஐயர் விலகினார்.

இதன் காரணமாக சூர்யகுமார் யாதவ் அணியில் இடம் பெற்றார். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். முதல் முறையாக டக் அவுட்டில் வெளியேறினார். இதே போட்டி நேற்று நடந்த 2ஆவது ஒரு நாள் போட்டியிலும் அவர் கோல்ட டக் முறையில் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக அவர் மீது விமர்சனம் எழுந்தது. மேலும், அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என்றும் கருத்து எழுந்தது. இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ்விற்கு ஆதரவு தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “சூரியகுமார் யாதவிற்கு டி20 போட்டிகளிலும் அப்படிப்பட்ட பந்தை வீசியிருந்தால் அவர் அவுட்டாகி இருப்பார். மிச்சல் ஸ்டார்க் வீசிய அபாரமான பந்து அது. மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாத நேரத்தில் பேக்கப் வீரராகவே சூர்யகுமார் அணியில் இருக்கிறார். இன்னும் தொடர்ச்சியானவாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.

சூர்யகுமார் யாதவ் திறமைக்கு இங்கு சந்தேகமே இல்லை. ஆனால் அவரிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வர அவர் களமிறங்கும் இடத்தை மாற்ற வேண்டும். ஹர்திக் பாண்டியா டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய விருப்பம் கொண்டவர். அவருக்கு நான்காவது இடத்தில் களமிறங்க வாய்ப்பு கொடுத்துவிட்டு சூரியகுமார் யாதவை ஆறாவது இடத்தில் களமிறக்க வேண்டும். கடைசி 18-20 ஓவர்களில் சூரியகுமார் யாதவ் அபாயகரமான வீரர். ஆகையால் அதற்கேற்றவாறு அவரை பயன்படுத்தினால் அணியின் ஸ்கோர் வேகமாக உயரும். உடனடியாக அவரை வெளியேற்றுவது என்பது சரியான தீர்வல்ல” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை