ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் மும்பை 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் சோ்த்தது. அடுத்து குஜராத் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்களே எட்டியது.

Advertisement

இதில், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை வீரா் சூா்யகுமாா் யாதவ், ஐபிஎல் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தாா். 49 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தார். சர்வதேச டி20யில் 3 சதத்தினை அடித்திருந்தாலும் இதுதான் ஐபிஎல்லில் அவரது முதல் சதம். இந்நிலையில் அவரது அதிரடியான ஆட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றன. 

Advertisement

 

இந்த ஆட்டம் குறித்து பேசிய முன்னாள் வீரர் சச்சின், “சூர்யகுமார் யாதவ் இந்த மாலை நேரத்தினை ஒளியூட்டியிருக்கிறார். இந்த ஆட்டம் முழுவதும் சிறப்பாக விளையாடினாலும் முஹமது ஷமி ஓவரில் தேர்ட்-மேன் இடத்தில் அடித்த சிக்ஸ் அபாரமானது. பந்திற்கு ஏற்றார்போல பேட்டிற்கு தேவையான கோணம் அமைய இடம்கொடுத்து பந்தீனை சீவி விடுவார். இது மிகவும் கடினமான ஷாட். உலகத்திலேயே சிலரால் மட்டும்தான் இந்தமாதிரி ஷாட்டுகளை அடிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News