உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மென் இவர் தான் - வெய்ன் பார்னெல் புகழாரம்!

Updated: Sat, Oct 01 2022 17:06 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் சூர்யகுமார் 33 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை கௌகாத்தியில் இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது. இதற்காக இரு நாட்டு வீரர்களும் கௌகாத்தி சென்று தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், தற்போதைய சூழ்நிலையில் உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மேன் இந்திய வீரர் சூர்யகுமார் தான் என்று தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் வெய்ன் பர்னெல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “கடந்த சில மாதங்களாக கவனிக்கும்மோது தற்போதைய சூழ்நிலையில் உலகின் சிறந்த டி20 பேஸ்ஸ்மேன் சூர்யகுமார் தான் என்று நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். அவர் 360 டிகிரியிலும் ரன்களை அடிக்கிறார். இதனால், அவரை கட்டுப்படுத்துவது பந்துவீச்சாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை