ரஞ்சி கோப்பை தொடர்களில் களமிறங்கும் சூர்யகுமார் யாதவ்!

Updated: Tue, Dec 06 2022 20:29 IST
Suryakumar Yadav to play upcoming season of Ranji Trophy (Image Source: Google)

இந்திய அணியின் அதிரடி நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ். இந்த ஆண்டு டி20 போட்டிகளில் சூர்யகுமார் அற்புதமான ஃபார்மில் உள்ளார். இந்த ஆண்டு 31 T20I போட்டிகளில், அவர் 46.56 சராசரியில் 1,164 ரன்கள் எடுத்துள்ளார். இரண்டு சதங்கள் மற்றும் 9 அரைசதங்கள் என கலக்கி வரும் சூர்யகுமாரால், ஒருநாள் கிரிக்கெட்டில் அதே போன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

சூர்யகுமார் யாதவால் நடப்பாண்டு, 13 ஒருநாள் போட்டிகளில் 26.00 சராசரியில் 260 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் ஒரு அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் முதல்தர டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான சாதனை படைத்துள்ளார். 77 போட்டிகள் மற்றும் 129 இன்னிங்ஸ்களில் 44.01 சராசரியுடன் 5,326 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவர் 14 சதங்கள் மற்றும் 26 அரை சதங்கள் அடங்கும்.

இதில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 200 ரன்கள் ஆகும். இந்த நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தமக்கு வாய்பபு வழங்கப்படும் என்று சூர்யகுமார் யாதவ் நம்பினார். ஆனால் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெறவில்லை. இதனையடுத்து சூர்யகுமார் யாதவ் அதிரடி முடிவை எடுத்துள்ளார். 

அதன் படி, பிசிசிஐ தமக்கு ஓய்வு கொடுத்தாலும், வரும் ரஞ்சி போட்டியில் மும்பை அணிக்காக விளையாட அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் திமது திறமையை நிரூபிகக வாய்ப்பு கிடைக்கும். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் முதலில் எப்படி பொறுமையாக விளையாடி விட்டு, பிறகு எப்படி அதிரடியை காட்டுவது என்ற ஐடியாவுக்கு சூர்யகுமார் யாதவ்க்கு கிடைக்கும். 

தற்போது மும்பை அணியில் ஏற்கனவே பிரித்வி ஷா, சர்ஃபராஸ் கான், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துஷார் தேஷ்பாண்டே என நட்சத்திர வீரர்கள் 17 பேர் கொண்ட அணியில் உள்ளனர். இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்ட ரஹானேவுக்கும் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

கடந்த சீசனில் நாக் அவுட்டுக்கு தேர்வான சர்ஃப்ராஸின் சகோதரர் முஷீர் கானும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பந்துவீச்சாளர் தவால் குல்கர்னி மற்றும் ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே ஆகியோர் விஜய் ஹசாரே கோப்பையின் போது ஏற்பட்ட காயங்களில் இருந்து மீளவில்லை, எனவே அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. சூர்யகுமார் யாதவை பொறுத்த வரையில், அவர் ஹைதராபாத்துக்கு எதிரான 2ஆவது போட்டிக்கு மும்பை அணியில் விளையாடுவார். ரஞ்சி தொடர் வரும் டிசம்பர் 13ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

மும்பை ரஞ்சி அணி: அஜிங்கியா ரஹானே (கேப்டன்), பிருத்வி ஷா, யஷஸ்வி ஜெய்ஷ்வால், அர்மான் ஜாஃபர், சர்பராஸ் கான், சுவேத் பார்கர், ஹர்திக் தாமோர், பிரசாத் பவார், ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்டியான், துஷார் தேஷ்பாண்டே, மோகித் அவஸ்தி, சித்தார்த் ரவுத், ராய்ஸ்டன் தியாஸ், சூர்யான் ஷெட்ஜ், ஷஷாங்க் அட்டார்டே, முஷீர் கான்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை