NZW vs INDW, 1st ODI: சூஸி பேட்ஸ் அதிரடியில் நியூசிலாந்து வெற்றி!

Updated: Sat, Feb 12 2022 13:19 IST
Image Source: Google

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்க வீராங்கனை சூஸி பேட்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய செத்தர்வைடும் அரைசதம் கடந்தார்.

இதன் காரணமாக 48.1 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 275 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சூஸி பேட்ஸ் 106 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் கோஸ்வாமி, வஸ்த்ரேகர், கெய்க்வாட், தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை துரத்திய இந்திய அணியில் மெஹனா, ஷஃபாலி வர்மா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் ஜோடி சேர்ந்த யஸ்திகா பாட்டியா - மிதாலி ராஜ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இதில் பாட்டியா 41 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த மிதாலி ராஜ் அரைசதம் கடந்த கையோடு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் 49.4 ஓவர்களில் இந்திய மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 62 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை