டி10 லீக்: ஹசரங்கா பந்துவீச்சில் இமாலய வெற்றியைப் பெற்ற டெக்கான் கிளாடியேட்டர்ஸ்!
டி10 லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் - பங்களா டைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற டைகர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய கிளாடியேட்டர்ஸ் அணியில் கொஹ்லர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி எதிரணியை திணறடித்தார்.
அதன்பின் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொஹ்லர் 39 பந்துகளில் 12 பவுண்டரி, 5 சிக்சர்களை விளாசி 96 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதன்மூலம் 10 ஓவர்கள் முடிவில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 146 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கைத் துரத்திய டைகர்ஸ் அணி வநிந்து ஹசரங்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் 8.3 ஓவர்களிலேயே வாரியர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ரன்களை மட்டுமே எடுத்தது. டெக்கான் அணி தரப்பில் வநிந்து ஹசரங்கா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் பங்களா டைகர்ஸ் அணியை வீழ்த்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது.