டி10 லீக்: மொயின் அலி அதிரடியில் நார்த்தன் வாரியர்ஸ் அபார வெற்றி!

Updated: Sat, Nov 27 2021 20:11 IST
T10 League: Northern Warriors beat Team Abu Dhabi by 10 wickets (Image Source: Google)

டி10 லீக் கிரிக்கெட் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் டீம் அபுதாபி - நார்த்தன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டா ஸ் வென்ற நார்த்தன் வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய டீம் அபுதாபி அணி 10 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக காலின் இங்ராம் 61 ரன்களைச் சேர்த்தார். 

இதையடுத்து களமிறங்கிய நார்த்தன் வாரியர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் மொயின் அலி - கென்னர் லூயிஸ் இணை அதிரடியாக விளையாடி எதிரணி பந்துவீச்சை சிதறடித்தது. 

இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதன்மூலம் நார்த்தன் வாரியர்ஸ் அணி 9.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் டீம் அபுதாபியை வீழ்த்தியது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மொயின் அலி 77 ரன்களையும், கென்னர் லூயிஸ் 65 ரன்களையும் சேர்த்தனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை