டி10 லீக்: புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கு முன்னேறியது டீம் அபுதாபி!

Updated: Mon, Nov 29 2021 21:24 IST
T10 League: Team Abu Dhabi beat Deccan Gladiators by 8 runs (Image Source: Google)

டி10 லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிரு இடங்களைப் பிடித்துள்ள டெக்கான் கிளாடியேட்டர்ஸ் - டீம் அபுதாபி அணிகள் மோதின. 

இப்போட்டியில் டாஸ் வென்ற டெக்கான் அணி முதலில் பந்துவீசுவதாக முடிவுசெய்தது. அதன்படி களமிறங்கிய டீம் அபுதாபி அணி கேப்டன் லிவிங்ஸ்டோனின் அபாரமான அரைசதத்தினால் 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக கேப்டன் லிவிங்ஸ்டோன் 59 ரன்களைச் சேர்த்தார். டெக்கான் அணியில் டைமல் மில்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதன்பின் இலக்கைத் துரத்திய டெக்கான் அணி முதல் பந்திலேயே டாம் கொஹ்லரின் விக்கெட்டை இழந்தது. அவரைத் தொடர்ந்து மூர்ஸ் 16 ரன்களிலும், அன்வர் அலி 42 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். 

இதனால் கடைசி ஓவரில் அந்த அணி வெற்றிபெற 15 ரன்கள் தேவைப்பட்டது. அபுதாபி அணியின் ஜேமி ஓவர்டன் வீசிய அந்த ஓவரை எதிர்கொண்ட ஹசரங்காவால் 6 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 

இதன்மூலம் டீம் அபுதாபி அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தியதுடன், டி10 லீக் புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும் பிடித்தது. 
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை