டி20 உலகக்கோப்பை: ஓமனை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றில் நுழைந்த ஸ்காட்லாந்து!

Updated: Thu, Oct 21 2021 22:55 IST
T20 WC 10th Match: Scotland are through the Super-12 (Image Source: Google)

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் ஓமன் - ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணி சீரான இடவேளையில் விக்கெட்டுகளைக் இழந்து, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்சி - கைல் கொட்சர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. 

இதில் முன்சி 20 ரன்னிலும், அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கொட்சர் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய மேத்யூ கிராஸ் - ரிச்சி பெர்ரிங்டன் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதன்மூலம் 17 ஓவர்களிலேயே ஸ்காட்லாந்து அணி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தியதுடன், டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பையும் பெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை