டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து பந்துவீச்சில் 122 ரன்னில் சுருண்டது ஓமன்!
டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்று வரும் 10ஆவது லீக் ஆட்டத்தில் ஓமன் - ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஓமன் அணியில் ஜதிந்தர் சிங் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து வந்த பிரஜபதியும் 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த அகிப் இலியாஸ் - முகமது நதீம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அதன்பின் அகிப் இலியாஸ் 37 ரன்களிலும், நதீம் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய ஸிஷான் மஹ்சூத் 34 ரன்களைச் சேர்த்து அணிக்கு உதவினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஓமன் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்களை மட்டுமே சேர்த்தது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஸ்காட்லாந்து அணி தரப்பில் ஜோஷ் டேவி 3 விக்கெட்டுகளையும் ,சஃபியான் ஷெரீப், மைக்கேல் லீஸ்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.