ஹென்றிக்ஸின் விக்கெட்டை தட்டித்தூக்கிய வான் பீக் - காணொளி!

Updated: Sun, Jun 09 2024 08:20 IST
ஹென்றிக்ஸின் விக்கெட்டை தட்டித்தூக்கிய வான் பீக் - காணொளி! (Image Source: Google)

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணியானது தொடக்கத்திலிருந்தே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்ததால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக ஏங்கெல்பிரெக்ட் 40 ரன்களையும், லோகன் வான் பீக் 23 ரன்களையும் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஓட்னீல் பார்ட்மேன் 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன், ஆன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியும் 16 ரன்களுக்குள்ளேயே 4 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தது. 

அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் டேவிட் மில்லர் இணை அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அணியை வெற்றியை நோக்கியும் அழைத்துச்சென்றனர். இதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 33 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தாலும், மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அரைசதம் கடந்த டேவிட் மில்லர் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 59 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. மேலும் இப்போட்டியில் அணிக்கு வெற்றியைத்  தேடிக்கொடுத்த டேவிட் மில்லர் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் ரீஸா ஹென்றிக்ஸின் விக்கெட்டை கைப்பற்றிய லோகன் வான் பீக்கின் காணொளி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

அதன்படி, இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரை லோகன் வான் பீக் வீச அதனை ரீஸா ஹென்றிக்ஸ் எதிர்கொண்டார். அப்போது அந்த ஓவரின் இரண்டாவது பந்தை ஹென்றிக்ஸ் தடுத்து ஆட முயற்சித்து தவறவிட, அது நேராக பைல்ஸ்களை மட்டும் தட்டித்தூக்கியது. இதனால் என்ன நடந்தது என்று தெரியாமல் நின்ற ஹென்ரிக்ஸ் 3 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை