விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு விருந்துபடைத்து வருகிறது. இதில் இன்றுந் நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள ஓமன் மற்றும் ஸ்காட்லாந்துஅணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக முடிவுசெய்து ஸ்காட்லாந்து அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஓமன் அணிக்கு நசீம் குஷி - பிரதிக் அத்வலே இணை தொடக்கம் கொடுத்தனர். 

Advertisement

இதில் நசீம் குஷி 10 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய கேப்டன் அகிப் இலியாஸ் 16 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் ஸீஷன் மக்சூத், கலித் கைல் இணை ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் அத்வலேவுடன் இணைந்த அயான் கானும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய பிரதிக் அதவ்லே தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Advertisement

அதன்பின் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரதிக் அத்வலே தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய மெஹ்ரான் கான் 13 ரன்களுக்கும், ரஃபிவுல்லா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலுயனுக்கு திரும்பினார். அதேசமயம் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அயான் கான் 4 பவுண்டரிகளுடன் 40 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஓமன் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களைச் சேர்த்தது. 

ஸ்காட்லாந்து அணி தரப்பில் சஃப்யான் ஷெரீப் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மேற்கொண்டு மார்க் வாட், பிராட் வீல், கிறிஸ்டோபர் சோல், மற்றும் கிறிஸ் கிரீவ்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஸ்காட்லாந்து அணி வீரர்கள் விளையாடவுள்ளனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News