சர்ச்சையை ஏற்படுத்திய நடுவரின் தீர்ப்பு; வைரலாகும் காணொளி!

Updated: Fri, Jun 21 2024 21:13 IST
Image Source: Google

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலபப்ரீட்சை நடத்தின. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 86 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ரீஸா ஹென்றிக்ஸ் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக்கும் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 65 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். 

இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் மார்க் வுட் பிடித்த கேட்ச்சானது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. அதன்படி இன்னிங்ஸின் 9ஆவது ஓவரை ஆதில் ரஷித் வீச அந்த ஓவரின் இரண்டாவது பந்தை லெக் திசையில் டி காக் சிக்ஸர் அடிக்க முயற்சித்து தூக்கி அடித்தார். ஆனால் அவர் அடித்த பந்தானது நேராக அத்திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த மார்க் வுட் கைகளில் தஞ்சமடைந்தது. 

இதனால் குயின்டன் டி காக்கின் விக்கெட்டை வீழ்த்தி விட்டதாக இங்கிலாந்து அணி வீரர் மகிழ்ச்சியை கொண்டாட, மறுபக்கம் டி காக் கள நடுவர்களிடம் கேட்சை பரிசோதிக்கும் படிக்கேட்டுக்கொண்டார். அதன்படி மூன்றாம் நடுவரும் மார்க் வுட் பிடித்த கேட்ச்சை சோதனை செய்தபோது அந்த பந்தானது தரையில் பாதியும், மீதி பாதி அவரது கைகளிலும் இருந்தது போல் காட்டப்பட்டது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

இதனால் மூன்றாம் நடுவர் பந்து முதலில் தரையில் பட்டதாக அறிவித்து நாட் அவுட் என்ற தீர்ப்பை வழங்கினார். இதையடுத்து மார்க் வுட் மற்றும் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் இருவரும் கள நடுவர்களிடம் முறையிட்டனர். ஆனால் விதிகளின் படி கேட்ச் பிடிக்கும் போது பந்தின் எந்த பகுதியும் தரையில் படக்கூடாது என்பதால் இந்த முடிவானது சரிதான் என்று கூறினர். இந்நிலையில் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை