அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்மீத் சிங் - காணொளி!

Updated: Wed, Jun 19 2024 22:56 IST
அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்மீத் சிங் - காணொளி! (Image Source: Google)

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆண்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ரீஸா ஹென்ரிக்ஸ் 11 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

அதன்பின் இணைந்த குயின்டன் டி காக் மற்றும் கேப்டன் ஐடன் மார்க்ரம் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின்னர் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 74 ரன்கள் எடுத்த நிலையில் டி காக் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லரும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். 

அவர்களைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐடன் மார்க்ரமும் 46 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹென்ரிச் கிளாசென் 3 சிக்சர்களுடன் 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து கடின இலக்கை நோக்கி அமெரிக்க அணி விளையாடி வருகிறது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

இந்நிலையில் இப்போட்டியில் அமெரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்மீத் சிங் தனது கடைசி ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்படி அதிரடியாக விளையாடி வந்த டி காக் சிக்ஸர் அடிக்கும் முயற்சியிலும், அடுத்து வந்த டேவிட் மில்லர், ஹர்மீத் சிங்கிடமும் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தனர். இந்நிலையில் ஹர்மீத் சிங் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை