ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் 24ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் மோதின. 

Advertisement

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் முகமது நபி, குலாபுதின் நைம் ஆகியோரது சிறப்பாக பேட்டிங்கால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக கேப்டம் முகமது நபி 35 ரன்களையும், குலாபுதின் நைப் 35 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் இமாத் வாசிம் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் முகமது ரிஸ்வான் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் ஆசாம் - ஃபகர் ஸமான் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. 

இதில் 30 ரன்களில் ஃபகர் ஸமான் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த கையோடு பாபர் ஆசாமும் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த முகமது ஹபீஸ், சோயிப் மாலிக் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இருப்பினும் அடுத்து களமிறங்கிய ஆசிஃப் அலி 19ஆவது ஓவரில் 4 சிக்சர்களை விளாசி அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இதன்மூலம் 19 ஓவர்களில் இலக்கை பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News