டி20 உலகக்கோப்பை: வென்டர் டுசென் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா!

Updated: Sat, Nov 06 2021 21:19 IST
T20 WC 39th Match: South Africa finishes off 189 runs their 20 overs (Image Source: Google)

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 39ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிக்ஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த டி காக் - டுசென் இணை அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டத்து.

இதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த டி காக் 34 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த் வென்டர் டுசென் அரைசதம் கடந்து அசத்தினார். பின் அவருடன் இணைந்த ஐடன் மார்க்ரமும் சிறப்பாக விளையாட தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்கோர் மளமளவென் உயர்ந்தது. 

தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த மார்க்ரம் 24 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 189 ரன்களைச் சேர்த்தது. 

Also Read: T20 World Cup 2021

இதில் அதிகபட்சமாக ரஸ்ஸி வென்டர் டுசென் 94 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 52 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து இமாலயம் இலக்கை துரத்தி இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை