டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 3ஆவது தகுதிச்சுற்று போட்டியில் அயர்லாந்து - நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
Advertisement
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி ஆரம்பம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் கர்டிஸ் காம்பர் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மேக்ஸ் ஓடவுட் அரைசதம் அடித்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக மேக்ஸ் ஓடவுட் 51 ரன்களைச் சேர்த்தார். அயர்லாந்து அணி தரப்பில் கர்டிஸ் காம்பெர் 4 விக்கெட்டுகளையும், மார்க் அதிர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.