டி20 உலகக்கோப்பை: ஸாம்பாவை புகழ்ந்த ஃபிஞ்ச்!

Updated: Fri, Oct 29 2021 11:33 IST
T20 WC: Finch hails 'terrific' Adam Zampa following Australia's win (Image Source: Google)

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசியது. 

அதன்படி முதலில் விளையாடிய இலங்கை அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணி வார்னர், ஃபிஞ்சின் அதிரடியான ஆட்டத்தினால் 17 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச்,“இது ஒரு நல்ல போட்டியாக இருந்தது. தொடக்கத்தில் இலங்கை வீரர்கள் சிறப்பாக விளையாடினர். ஆனல் ஆடம் ஸாம்பா தனது பந்துவீச்சில் அவர்களைக் கட்டுப்படுத்தினார். 

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

அவரைத் தொடர்ந்து ஸ்டார்க்கும் சிறப்பாக செயல்பட்டார். அதன்பின் பேட்டிங்கில் வார்னர் ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணியின் பலத்தை கூட்டியுள்ளது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை