டி20 உலகக்கோப்பை அரையிறுதி: மொயின் அதிரடி, நியூசிலாந்துக்கு 167 இலக்கு!
டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி அபுதாபியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதாலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லர் - ஜானி பேர்ஸ்டோவ் இணை தொடக்கம் தந்தது.
இதில் பேர்ஸ்டோவ் 13 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 29 ரன்னில் ஜோஸ் பட்லரும் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் - மொயின் அலி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மாலன் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய மொயின் அலி அரைசதம் அடித்து அசத்தினார்.
Also Read: T20 World Cup 2021
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 166 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக மொயின் அலி 51 ரன்களைச் சேர்த்தார்.