ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தீவிர வலை பயிற்சியில் இந்திய வீரர்கள்!

Updated: Fri, May 31 2024 13:24 IST
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தீவிர வலை பயிற்சியில் இந்திய வீரர்கள்! (Image Source: Google)

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரானாது வரும் ஜூன் மாதம் முதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கு இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மேலும் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகியும் வருகின்றன. 

இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியும் சமீபத்தில் நியூயார்க் சென்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளது. மேலும் அக்குழுவில் பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்த்து ஜூன் 05ஆம் தேதி விளையாடவுள்ளது. 

மேலும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஜூன் 09ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அணியானது வங்கதேச அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்திலும் பங்கேற்கவுள்ளது. இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியானது தீவிர வலை பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் காணொளியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி வீரர்கள் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வ, ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் காட்சிகள் இடம்பிடித்துள்ளனர்.

 

அதேசமயம் இன்றைய தினம் நியூயார்க் சென்றுள்ள நட்சத்திர வீரர் விராட் கோலியும் இந்திய அணியுடன் கூடிய விரைவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவர் நாளை நடைபெறவுள்ள வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்பாரா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் அவர் அயர்லாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக தனது பயிற்சிகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்திய அணி: ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெயஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ஷிவம் தூபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங். 

ரிஸர்வ் வீரர்கள் - ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹ்மத், ஆவேஷ் கான்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை