டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் ஃபிஞ்ச், வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - கிளென் மேக்ஸ்வெல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பின் 35 ரன்களில் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸும் அதிரடியில் மிரட்டினார்.
மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்மித் அரைசதம் கடந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளைக் மட்டும் இழந்து 152 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 57 ரன்களையும், ஸ்டோய்னிஸ் 41 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.