டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை பந்தாடியது ஆஸ்திரேலியா!

Updated: Thu, Nov 04 2021 18:43 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 34ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி ஆடம் ஸாம்பாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 15 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 74 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் ஆடம் ஸாம்பா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

Also Read: T20 World Cup 2021

இதனால் 6.2 ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது. இதில் அதிகபட்சமாக ஆரோன் ஃபிஞ்ச் 40 ரன்களை குவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை