எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் மெல்போர்னில் இன்று நடைபெற்றுவரும் போட்டியில் இங்கிலாந்து - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் - ஆண்டி பால்பிர்னி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

Advertisement

பின்னர் 16 ரன்களில் ஸ்டிர்லிங் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஆண்டி பால்பிர்னி - லோர்கன் டக்கர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டக்கர் 34 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்டி பால்பிர்னி அரைசதம் கடந்த அசத்தினார். 

அதன்பின் அவரும் 62 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அயர்லாந்து வீரர்களால் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர். இதனால் 19.2 ஓவர்களில் அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்தது.

இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட், லியாம் லிவிங்ஸ்டோன் தலா 3 விக்கெட்டுகளையும், சாம் கரண் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News