டி20 உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது.
Advertisement
அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ஹஸ்ரதுல்லா ஸஸாய் - முகமது ஷசாத் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் இருவரும் அரைதம் கடந்து அசத்தினர்.
அதன்பின் 56 ரன்களில் ஸஸாய் ஆட்டமிழக்க, 54 ரன்னில் ஷசாத்தும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய குர்பாஸ் தனது பங்கிற்கு 33 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மெக்காய் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.