ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை அப்செட் செய்யுமா அமெரிக்கா?

Updated: Thu, Jun 06 2024 11:46 IST
Image Source: Google

 

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணியை எதிர்த்து முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணியானது பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் முதல் போட்டி என்பதாலும், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இவ்விரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் இப்போட்டியின் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

பாகிஸ்தான் அணி

கடந்தாண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறி இங்கிலாந்திடம் தோல்வியைச் சந்தித்த பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது. சமீப காலங்களில் அந்த அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தாலும் அணியின் பேட்டிங் குறித்த விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஏனெனில் அணியின் பேட்டிங்கில் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வானை தாண்டி மற்ற வீரர்கள் சோபிக்க தவறுவதே காரணம்.

பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான், சைம் அயூப், உஸ்மான் கான், ஃபகர் ஸமான், இஃப்திகார் அஹ்மத், அசாம் கான் ஆகியோர் இருப்பது நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளதாக பார்க்கப்படுகிறது. அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஷாஹீன் அஃப்ரிடி, முகமது அமீர், ஹாரிஸ் ராவுஃப், நசீம் ஷா ஆகியோருடன் அப்பாஸ் அஃப்ரிடியும் இருப்பது அணியின் பலத்தை கூட்டியுள்ளது. 

பாகிஸ்தான் அணியின் உத்தேச லெவன்: சாம் அயூஃப், முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), ஃபகார் ஜமான், இஃப்திகார் அகமது, ஷதாப் கான், இமாத் வாசிம், ஷஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், முகமது அமீர்.

அமெரிக்கா அணி

நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கனடா அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியிலேயே அமெரிக்க அணி அபார வெற்றியைப் பதிவுசெய்த உத்வேகத்த்டன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதிலும் அந்த அணியின் மிடில் ஆர்டர் வீரர் ஆரோன் ஜோன்ஸ் அபாரமாக விளையாடி 10 சிக்ஸர்களை விளாசித் தள்ளியது அணிக்கு கூடுதல் மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

அவருடன் கேப்டன் மொனாங்க் படேல், ஸ்டீவன் டெய்லர், ஆண்ட்ரிஸ் கஸ், கோரி ஆண்டர்சன் உள்ளிட்ட வீரர்களும் பேட்டிங்கில் சோபிக்கும் பட்சத்தில் நிச்சயம் நடப்பு தொடரில் மிகவும் வலுவான அணிகளில் ஒன்றாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அணியின் பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் ஹர்மீத் சிங், நிதிஷ் குமார், ஜஸ்தீப் சிங், சௌரப் நேத்ரவல்கர், அலி கான், ஷாட்லி வான் ஷால்க்விக் சிறப்பாக செயல்பட்டுவருவது அணிக்கு பலனை அளிக்கலாம்.

அமெரிக்கா அணியின் உத்தேச லெவன்: ஸ்டீவன் டெய்லர், மோனாங்க் படேல் (கேப்டன்), ஆண்ட்ரிஸ் கஸ், ஆரோன் ஜோன்ஸ், கோரி ஆண்டர்சன், நிதிஷ் குமார், ஹர்மீத் சிங், ஷாடில் வான் ஷால்க்விக், ஜஸ்தீப் சிங், சவுரப் நேத்ரவால்கர், அலி கான்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை