usa vs pak
பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதே சந்தேகம் தான் - வாசிம் அக்ரம் விமர்சனம்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டல்லாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர்கள் சோபிக்க தவறிய காரணத்தால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் ஆசாம் 44 ரன்களும், ஷதாப் கான் 40 ரன்களையும் சேர்த்தனர். அமெரிக்க அணி தரப்பில் கெஞ்ஜிகே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்க அணியில் ஸ்டீவன் டெய்லர் 12 ரன்களில் ஆட்டமிழந்தாலும், கேப்டன் மொனாங்க் படேல் 50 ரன்களையும், ஆண்ட்ரிஸ் கஸ் 35 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆரோன் ஜோன்ஸ் 36 ரன்களையும், நிதீஷ் குமார் 14 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்தனர். இதன்மூலம் அமெரிக்க அணியும் 20 ஓவர்கள் ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமா இழந்து 159 ரன்களைச் சேர்த்ததன் மூலம் இப்போட்டியானது சமனில் முடிந்து, சூப்பர் ஓவருக்கு சென்றது.
Related Cricket News on usa vs pak
-
160 ரன்கள் என்பது எடுக்கக்கூடிய இலக்கு தான் - மொனாங்க் படேல்!
உலகக் கோப்பையில் விளையாடுவதால், ஒவ்வொரு ஆண்டும் இதைச் செய்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்காது. அதனால் ஒவ்வொரு பந்திலும் நாங்கள் எங்களுடைய அனைத்து முயற்சியையும் கொடுத்துள்ளோம் என்று அமெரிக்க அணி கேப்டன் மொனாங்க் படேல் தெரிவித்துள்ளார். ...
-
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது - பாபர் ஆசாம்!
வெற்றிக்கான முழு பாராட்டுகளும் அமெரிக்காவை சேரும். அவர்கள் 3 துறைகளிலும் எங்களை விட சிறப்பாக விளையாடினார்கள் என பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீழ்த்தி அமெரிக்கா அசத்தல் வெற்றி - ஹைலைட்ஸ் காணொளி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று அசத்திய நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியின் ஹைலைட்ஸ் காணொளி இணையாத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: ஜோன்ஸ், நேத்ரவால்கர் அபாரம்; சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை அப்செட் செய்து அமெரிக்கா வரலாற்று வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் அமெரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றிப்பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. ...
-
T20 WC 2024: ரசிகரிடம் மோதிய அசாம் கான்; வைரலாகும் காணொளி!
அமெரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் வீரர் அசாம் கான், பெவிலியன் திரும்பும் போது ரசிகரிடம் கோபத்தை வெளிப்படுத்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: விராட் கோலி, ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளிய பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் முறியடித்து அசத்தியுள்ளார். ...
-
T20 WC 2024: பாகிஸ்தான் பேட்டர்கள் சொதப்பல்; அமெரிக்க அணிக்கு 160 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்க அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அபாரமான கேட்ச்களை பிடித்த ஸ்டீவன் டெய்லர் - வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அமெரிக்க அணி வீரர் ஸ்டீவன் டெய்லர் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை அப்செட் செய்யுமா அமெரிக்கா?
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்கா vs பாகிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் போட்டியில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24